Tuesday, May 5, 2009

பல முஸ்லிம்கள் ஒரே தட்டில் ஒன்றிணைந்து சாப்பிடுகிறார்களே இது ஏன்?


இரண்டாயிரம் ஆண்டில் ஒருவருக்குப் போடும் ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்தினால் நோய் வருகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் ஒரே தட்டில் பல முஸ்லிம்கள் ஒன்றினைந்து சாப்பிடுகிறார்களே இது ஏன்?


முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ உலகம் கூறுவது என்னவென்றால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து இருப்பதாலோ, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதலோ எய்ட்ஸ் தொற்றாது என்பது மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாகும். இது தான் உண்மையும் கூட.


எய்ட்ஸ் நோயாளியுடன் உடலுறவு கொள்வதாலும், எய்ட்ஸ் நோயாளியை முத்தமிடுவதாலும், எய்ட்ஸ் நோயாளி பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதாலும், அவரது இரத்தத்தை செலுத்திக் கொள்வதாலும் மட்டுமே எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்கிறது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


எனவே ஒரே தட்டில் சாப்பிடும் போதெல்லாம் எய்ட்ஸ் பரவி விடும் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றாலும் ஒரே தட்டில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என இஸ்லாம் கட்டலையாகவும் கூறவில்லை. விரும்பியவர்கள் ஒரே தட்டில் சாப்பிடலாம். இதை விரும்பாதபவர்கள் தனி தட்டிலும் தனியாக சாப்பிடலாம்.


இது தொடர்ந்து செய்ய்யப்பட்டு வருவதன் நோக்கம் என்னவெனில் இஸ்லாத்தின் தனிச்சிறப்பை, சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், பறை சாற்றவும் தான் முஸ்லிம்கள் இப்படி செய்து வருகிறார்கள். பிற மதத்தவர்கள் கூட இஸ்லாத்தின் சிறப்பைப் பற்றிக் கூறும் போது இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது. ஒரே வரிசையில் நின்று ஒன்றாகத் தொழுவர்கள். ஒரே தட்டில் சாப்பிடுவார்கள் எனக் கூறக் கேள்விப்படிருப்பீர்கள்.


தீண்டாமை ஒழிய சகோதரத்துவத்தை நிலைநாட்ட எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் முஸ்லிம்கள் செயல் ரீதியாக காட்டுகிறார்கள். இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டும் நிகழ்ச்சியாகும். மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற போது நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற பிரச்சினை வராது ரத்த ஆறு ஓடாது. ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதற்காக தானே தவிற வேறு காரணம் எதுவும் இல்லை.

1 comment:

  1. உங்க வீட்டுகு அதாங்க வலைதலத்திர்கு அடிகடி வர்ரன் எனகு புத்திவர்ரமாரி நல்ல நல்ல விசயமா போடுங்க

    ReplyDelete