Saturday, May 9, 2009

இன்று உலகில் மக்கள் பட்டினியால் செத்து மடிகின்றனர் இவர்களின் உணவுக்கு மட்டும் இறைவன் போறுப்பேற்க்க வில்லையா? குர்ஆன் (11:6) வசனத்திற்கு முறன்படுகிறதே


உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்கும் இடத்தையும், சென்று சேருமிடத்தையும் அவன் நன்கறிவான்'' திருக்குர்ஆனில் (11:6) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று பட்டினிச் சாவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவே! இது முரண்பாடாக உள்ளதே?

அந்த வசனத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் குழப்பம் ஏதும் இருக்காது.

ஒவ்வொருவருடைய உணவுக்கும் இறைவன் பொறுப்பு என்றால், மற்றவர்கள் யாரும் இதற்குப் பொறுப்பாளிகள் அல்லர் என்பதே பொருளாகும். நீங்கள் இன்று வயிறார சாப்பிட்டால் அதை உங்களுக்குத் தந்தவன் இறைவன். நீங்கள் கால் வயிற்றுக்குத் தான் சாப்பிட்டீர்கள் என்றால் அதை வழங்கியவனும் அவனே என்பது தான் இதன் பொருள்.

நீங்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் எந்த மனிதனுக்கும் மரணம் வரவே கூடாது. சாப்பாடு கிடைக்காமல் ஒருவர் மரணிக்கிறார் என்றால், அவருக்கு இது வரை உணவு வழங்கியது இறைவன் தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு நூறு வயதை அல்லாஹ் கொடுத்தால் அது வரை அவருக்கு உணவளித்தது அல்லாஹ் தான். ஒருவருக்கு ஒரு மாதம் வாழ் நாள் என்று அல்லாஹ் தீர்மானித்திருந்தால், அந்த ஒரு மாதம் தான் அவரது உணவுக்கு அல்லாஹ் பொறுப்பாளியாவான். இப்படிப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.குர்ஆன் ஒருபோதும் முறண்படாது என்பதும் தெளிவாகும்.

No comments:

Post a Comment