Thursday, April 30, 2009

ஏன் ஐவேளை தொழ வேண்டும்?


ஒரு தடவை தொழுதால் போதாதா?ஏன் ஐந்து நேரம் தொழ வேண்டும்?


கடவுளுக்கு தூக்கம் மறதி இல்லை எப்போதும் விழிப்போடுதான் இருப்பார் என சொல்கிறீர்கள் அப்படிப்பட்டவரை ஒரு தடவை தொழுதால் நம்மை பார்க்க மாட்டாரா? இல்லை ஐந்து வேலை தொழுதால் தான் நம்மை பார்ப்பாரா?


நாம் தொழாமல் இருந்தாலும் கூட கடவுள் நம்மை கண்டிப்பாக பார்ப்பார். கடவுளுக்கு மறதி கிடையாது.


ஆனால் நாம் தொழுக வேண்டும்.ஏன்? காலையில் தொழுத நாம் இறைவனை மறந்துவிட்டு மக்களை ஏமாற்ற, லஞ்சம் வாங்க, கொடுமைகள் செய்ய ஆரம்பிக்கிறோம். இறை விசுவாசத்தை நினைவுபடுத்தி புதுப்பித்து புத்துணர்வு பெறுகிறோம். இது கடவுளுக்கு மறதி என்ற காரணத்தினால் அல்ல. எனக்கும், உங்களுக்கும் இருக்கும் மறதியின் காரணத்தினால் இறைவனை மறந்து தவறு செய்ய ஆரம்பிக்கிறோம். இதற்காக அப்படி தொழுக வேண்டி இருக்கிறது.


உதாரணமாக கோயிலுக்கு சென்று வழிபடும் போது இருக்கின்ற அந்த உணர்வு வெளியே வந்த சற்று நேரத்தில் சிறிது சிறிதாக மங்கி விடுவதை அனுபவ ரீதியாக நாம் பார்க்கலாம். எனவே நமது வாழ்வைச் சீர்படுத்துவதற்காகத் தான் அடிக்கடி ஐவேளை பள்ளி வாயிலுக்குச் சென்று அந்த இறை உணர்வை புதுப்பிக்க வேண்டி இருக்கிறது.


இங்கு மிக மிக வருத்தத்தோடு ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதாவது முஸ்லிம்களில் ஐந்து நேரமும் பள்ளிக்குச் சென்று தொளுபவர்களிடம் இருக்கும் நேர்மை, ஒழுக்கம், நியாயம், பணிவு போன்றவை தொலாதவர்களிடம் காணப்படுவதில்லை. இதை நீங்கள் முஸ்லிம்களிடம் தாராளமாகக் காணலாம். ஐந்து நேரமும் தொளுபவர்களிடம் காணப்படும் பண்பு வாரத்துக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டும் தொளுபவர்களிடம் இருக்காது. எனவே தொழுகை என்பது நமது நகனுக்காகவே. ஆகவே ஐவேளையும் தொழுதாக வேண்டும்.

Monday, April 27, 2009

""மக்கா (காஃபா)வில் உள்ள "ஹஜருல் அஸ்வத்' கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே ஏன்?


""மக்கா (காஃபா)வில் உள்ள "ஹஜருல் அஸ்வத்' கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்களே!.. இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்களே?

மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள "ஹஜருல் அஸ்வத்' என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.
ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.
இது தான் முக்கியமான வித்தியாசம்.

ஒரு கல்லை வணங்குவது என்றால்
அக்கல்லின் முன் நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.
துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.
அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.
நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும்.

இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.
கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். "ஹஜ்ருல் அஸ்வத்' பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.
அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.
அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி ""நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்''என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

"ஹஜருல் அஸ்வத்' என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.
அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

"ஹஜருல் அஸ்வத்' என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படயில் தானே அதற்க்கு கடவிள் தன்மை உண்டு என்பதற்காக இல்லை.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.
"ஆம்ஸ்ட்ராங்' தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.
அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்கத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்கள் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.
எந்த முஸ்-மாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.
ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தை கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.

மேலும், லிங்கம் சொர்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். "ஹஜருல் அஸ்வத்' சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Saturday, April 25, 2009

இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாடு செய்வதை எதிர்ப்பது ஏன்?


பொதுவாக எல்லா மதத்தினரும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கிறார்கள்.ஆனால் முஸ்லிம் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்வதை ஆண்களே எதிர்கிறார்கள்.குர்ஆனில் இதற்குத் தடை உண்டா?சேது,அதிராம்பட்டியனம்:
பதில்:
குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இன்று தவறானப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு பற்றி என்னைக் கேட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல யாரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம் என்று தான் கூறுவேன்.

குடும்ப கட்டுப்பாட்டை செய்யாததால் மக்கள் தொகை பெருகுகிறது மக்கள் தொகைப் பெருகத்தால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது.குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டால் எல்லா குறைகளும் தீர்ந்து விடும் எனப் பிரச்சாரம் செய்ர்கிறார்கள். இது ஒரு மோசடிப் பிரச்சாரமாகும். இன்றைக்கு ஏறக்குறைய உலகத்தில் 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500 கோடி மக்களுக்கத் தேவையான உணவு உற்பபத்தியாகிக் கொண்டிருக்கிறது. தவறு எங்கு நிகழ்கிறது எனில் எல்லா உற்பத்தியும்பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது. 100 கோடி மக்கள் வாழக்கூடிய பணக்கார நாடுகளில் 1000 கோடி மக்களுக்குத் தேவையானபொருட்கள் குவிந்து விடுகிறது.

பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக மீதி உள்ள கோதுமை,அரிசி,பால் போன்றவற்றை உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடலில் போய் கொட்டி விடுகிறார்கள்.எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும். இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 100 கோடியாகும். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை 30 கோடி இருக்கும் போதும் இப்போதுள்ள உணவு பற்றாக்குறை இருக்கத் தான் செய்தது.

இந்திய மக்கள் தொகை 100 கோடி இருக்கும் போது எப்படி 30 கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதே போல் 30 கோடி மக்கள் இருந்த போது 10 கோடி மக்களுக்கும்,10 கோடி இருந்த போது 3 கோடி மக்களுக்கும் உணவு பற்றாக்குறை இருந்து வந்தது உண்மை. இதற்குக் காரணம் உணவு பற்றாக்குறையா? அல்லது மக்கள் தொகை பெருக்க? அல்லது விநியோக முறை சரியில்லாதது காரணமா? என ஆராய்ந்தால் விநியோக முறை சரியில்லை எனக் கூறலாம்.உற்பத்தியாகும் பொருட்களில் பெரும்பாலானவை ஒரே பக்கத்தில் போய் குவிந்து விடுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து பல நன்மைகள் அடைந்து இருக்கிறோம்.

அன்றைக்கு நெல்லைப் பயிர் செய்து 6 மாதம் கழித்து அறுவடை செய்தோம். பிறகு மூன்று மாதமாகச் சுருக்கி இன்று ஒன்றறை மாதத்தில் அறுவடை செய்ய அரம்பித்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம் மக்கள் தொகை பெருக்கமும்,நெருக்கடியும் தான். இக்காரணிகள் மனிதனைப் புதிய விஞ்ஞானக் கண்டுப்பிடுப்புகளின் பக்கம் இழுத்துச் செல்கிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் பஸ்ஸைக் கண்டுப்பிடித்தோம். விமானத்தை கண்டுப்பிடித்தோம்.மக்களுக்கான வசதி ஏற்படுத்தும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து கொண்டு செல்வதெல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவேயாகும்.

இன்னொன்றையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர்கள் இதே போல் யோசித்து இருந்தால் இன்று இவர்கள் ஆதரித்துப் பேச முடியுமா? உணவுப் பற்றாக்குறைகளுக்கு மக்கள் தொகைப் பெருக்கம் உண்மையான காரணமல்ல. வினியோகிக்கும் முறை சரியில்லை. பெரிய பெரிய பண முதலைகளிடம் செல்வங்கள் குவிந்து விடுகின்றன. இது தான் அடிப்படை காரணம். குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கின்றதா? என்றால் இந்த உரிமையை உரியவர்களிடமே விட்டு விடுகிறது. ஒரு பெண்ணிற்க்கு குழந்தை பெரறுவதால் ஏதேனும் கெடுதல் வரும் என்றால் குழந்தை பிறப்பை நிறுத்திக்கொள்ளும் உரிமை உண்டு.

Thursday, April 23, 2009

இஸ்லாமியர்கள் தர்காவில் கும்பிடு போடுவது ஏன்?




குர்ஆனில் கூறப்படிருப்பது போல் இறைவன் ஒன்று தான். முஹம்மது நபியும் இறைத்தூதர் தான். அவர் கடவுள் இல்லை அப்படி இருக்க தங்கள் மதத்தில் அவ்லியாக்கள், தர்காக்கள், வைத்து இறந்தவர்களுக்கு கும்பிடு போடுகிறார்களே இது ஏன்?


மகாலிங்கம்:மதுரை


பதில்:


சகோதரர் மகாலிங்கம் அவர்கள் நல்ல கேள்வியை கேட்டிருக்கிறார். இஸ்லாமிய சமூகம் வெட்கி தலை குனிய வேண்டிய கேள்வியை கேட்டிருக்கிறார்... தர்கா என்றாள் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தியாக வேண்டும். அப்போது தான் இக்கேள்விக்கான விடை புரியும்.


அதிகமான மக்களுக்கு இது விளங்குவதில்லை. தர்கா என்பது இறைவன் இருக்கும் இடம் என அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் வாழுகின்ற காலத்தில் நல்ல மனிதர் என பெயர் எடுத்த ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்துவிட்டு அப்புதை குழியின் மேல் கட்டடம் கட்டி அவருக்கு வழிபாடு நடத்தப்படும் இடம் தர்காவாகும்.


இறைவன் ஒருவன் தான் என குர் ஆனில் கூறப்பட்டிருக்க தர்காவுக்கு போகலாமா? என சகோதரர் மகாலிங்கம் அவர்கள் கேட்டார்கள். நிச்சயமாக முடியாது. இது மிகப்பெரும் தவறு. சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த அரபு நாடுகளிலோ தர்காக்கலள் கிடையாது. அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாடுகளிலெல்லாம் முஸ்லிம்கள் வாழகிறார்கள். அங்கெல்லாம் தர்காக்கள் கிடையாது.


"எனது சமாதியில் கட்டடம் கட்ட வேண்டாம். வழிபாடு நடத்த வேண்டாம். விழாக்கொண்டாட வேண்டானம்" என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அவர்களின் சமாதியையே வழிபடக் கூடாதென்றாள் மற்றவர்களின் சமாதிக்ள் எம்மாத்திரம்?


அறியாமையின் காரணமாக இஸ்லாம் என்றால் என்ன? என்று புரியாததன் காரணமாக இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடத்தப்படுகிறது.


ஆளுக்கொரு கடவுள் வைத்துக் கொள்ள விரும்புவது மணிதனிடம் காணப்படும் பலவீணமாகும். ராஷ்டீரிய


ஜனதாதளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஒரு முறை பாராளுமறத்தில் உரை நிகழ்த்துகையில் இந்தியாவின் ஜனத்தொகையின் அளவுக்கு இண்தியாவில் கடவுள் உண்டு எனக்கூறினார். அதாவது எத்தனை கோடி மக்கள் நாட்டில் வாழ்கிறார்களோ அத்தனை கோடி கடவுள் உண்டு என்பது தான் அதன் பொறுள். ஒன்றை பார்த்து அது கடவுள் என நான்கு பேர் சொன்னால் ஐம்பது பேர் அதை ஆமோதிப்பார்கள் இப்படி தான் கடவுள் கோட்பாடு இருக்கிறது.


முஸ்லிம்களில் பலர் கு ஆனையும் படிக்காமல், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது போதனைகளையும் தெறிந்து கொள்ளாமல் தர்காக்களுக்கு கும்மிடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்செயலுக்கும் இஸ்லாத்திற்க்கும் தொடர்பே கிடையாது. இஸ்லாமியப் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டால் முஸ்லிமாகி விட முடியாது. இந்தக் கேள்வியிலிருந்து முஸ்லிம்கள் பெற வேண்டிய பாடம் ஏராளம் உண்டு.




Tuesday, April 21, 2009

இந்துக்களை காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா?


முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருகுர்ஆன் கூறும்போது காஃபிர்கள் எண்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது.இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.


அதாவது இந்துக்களை கஃபிர்கள் என்று திருகுர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்.


முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மதான்.இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காஃபிர்கள்தான் என்பது உண்மையே.


ஆனால் காஃபிர்கள் என்றால் அது ஏசும் சொல் எங்கிறார்களே அதில்தான் உண்மையில்லை.


காஃபிர்கள் என்பதற்க்கு கிறுக்கன்,பைத்தியக்காரன்,முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும்.அப்படியெல்லாம் அந்த சொல்லுக்கு பொருள் இல்லை.


காஃபிர் என்ற அரபிசொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர்,ஏற்க்காதவர் என்பதுதான் பொருள்.இஸ்லாத்தை ஏற்றவர்களை முலிம்கள்(ஏர்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்க்காதவர்களை(கஃபிர்கள்)என்றும் கூறுகிறது.ஏற்க்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூறமுடியாது.ஏற்க்காதவர்கள் என்றுதான் கூற முடியும்.இதில் ஏசுவது ஒன்றுமே இல்லையே.


இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும்போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏசுவதாக யாரும் கருத மாட்டார்கள்.இது போன்ற வார்த்தை பிரயோகமே காஃபிர் என்ற சொல்லாகும்.


சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும்போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது.முஷ்ரிக் என்றால் "பல கடவுள்களை நம்புபவர்கள்" என்பது பொறுள் பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பலகடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என கூற முடியுமா?பல கடவுளை நம்பும் மக்கள் என்றுதானே கூறமுடியும்.இது எப்படி ஏசுவதாகும்?

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்கலாள் குர்ஆன் ஏசவில்லை என்பதுதான் உண்மை.

Monday, April 20, 2009

இறைவனிடமே உதவி தேடுவோம்!


அல்லாஹ்வின் திருப்பெரயரால்!


எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும்,எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீரியதையும் மன்னிப்பாயக!எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!(உன்னை)மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!

-திருக்குர்ஆன் 3:147