Monday, December 14, 2009

முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொது அதை முளைகளாக நாடியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

மலைகளை முளைகளாக நாட்டினான். திருக்குர்ஆன் (79 :31 )


பூமியை தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78 :6,7 )


அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம், இனிமையான நீரையும் உங்களுக்கு புகட்டினோம் .. திருக்குர்ஆன் (77 :27 )


பூமியை விரித்தோம் , அதில் முளைகளை நாட்டினோம் , அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம் . திருக்குர்ஆன் (15 :19 )

பூமி உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும் , நீங்கள் வழியரிவதர்க்காக பல பாதைகளையும் , நதிகளையும் , பல அடையாளங்களையும் அவன் அமைத்தான் . நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர் . திருக்குர்ஆன் (16 :15,16)


பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதர்க்காக முளைகளை ஏற்ப்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்ப்படுத்தினோம். (திருக்குர்ஆன் 21:31)


(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி , அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா ? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா ? இல்லை ! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை . (திருக்குர்ஆன் 27:61)


நீங்கள் பார்க்கக்கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்ந்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 31 :10 )


அதன் மேலே முளைகளை ஏற்ப்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. (திருக்குர்ஆன் 41:10 )


ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதர்க்காக அறியப்படுவதே முளைகலாகும்.


இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.


வேகமாக பூமி சுழலும்போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.


இந்த நிலை ஏற்ப்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.


இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கணம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முலைகள் நட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.


ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.


இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.


பூமி முதலில் உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்க்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.


முதல் இரண்டு நாட்களில் பூமியை படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்ப்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41 :10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.

1 comment: