Tuesday, November 17, 2009

விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு.

விண்வெளிப் பயணம் சாத்தியமே.

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உரிவாக்கி அதன் வழியாக சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இர்நகியுல்ளான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனை சுற்றிக் கொண்டு இருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றி சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த எழுத படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கு சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்ப்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது.

மனித ஜின் கூட்டமே வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன்-55 :33 )

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்: மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாக சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதை கற்பனை செய்து கூட பார்த்ர்ஹதிராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதெற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.
விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாகி விடுகிறான். இவாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். (திருக்குர்ஆன்-6:125)

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை.விர்ரென்று மனிதன் மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்க்கொல்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோணத்திலும் விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 51:17 )


பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.


Saturday, November 14, 2009

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!


திருப்பித் தரும் வானம்!

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.
(திருக்குர்ஆண்:86:11,12,13,14)


திருக்குர்ஆண் முகம்மது நபியின் கற்ப்பனை அல்ல. மாறாக தன்னுடைய கூற்றாகும் என்பதை இறைவன் சத்தியம் செய்து கூறும்போது திருப்பித் தரும் வானம் என்ற அற்ப்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பி தருகிறதென்றால் ஏராளாமான விசயங்களை திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும்,நீர் நிலைகக்ளிலிருந்தும் உருஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றுருகின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு துருமபவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கும் செயற்கைக் கொள் மூலம் ஓளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஓளி பரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கின்றான்.

இன்னும் நாம் சிந்திக்கும் பொது ஏராளமான விசயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முகம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது, படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

Thursday, November 12, 2009

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

வானங்களும்,பூமியும் இணைந்திருந்தன என்பதையும்,அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்,உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆண் 21:30)

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆண் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுஉக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம்தான் பிரித்து பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆண் இருந்தால் மட்டுமே இதை கூற முடியும்.

இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்த தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் திருக்குர்ஆண் தெளிவாக கூறுகின்றது.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பாட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும்,பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம் என அவை கூறின. (திருக்குர்ஆண்:41:11)

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆண் கூறி இது இறைவேதம் தான் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது.

Saturday, November 7, 2009

திருக்குர்ஆண் ஓர் வாழும் அற்புதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாராண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது அறிவைக்கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டுகொள்ளும்.

நூறு வருடங்களுக்கு பின் என்ன நடக்கும், என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்க்கு காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாக சேர்ந்து உருவாகிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்து பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதை காண முடியும்.அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும்,படிக்கவும் தெரியாத,மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆணை பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியில் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உர்ப்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களை குர்ஆண் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. 21 ஆம் நூற்றாண்டின் ஓர் தேர்ந்த மருத்துவ மேதையை விட அழஅகாக பேசுகிறது.

தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்கஆனின் பேச்சு இல்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்ப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்கஆண் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் "இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்" என்ற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும்.

இன்றைய அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆண் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வர்.முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆண் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கொரும் அளவுக்கு குர்ஆண் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாகிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு எல்லாராலும் ஏற்கத்தக்க அற்ப்புதமான தீர்வுகளை குர்ஆண் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்த கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குளம்,கோத்திரம்,சாதி,இவற்றால் ஏற்ப்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் திருக்குர்ஆண் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒலித்துக் கட்டியதை இதற்க்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை திருக்கஆண் கூறுகிறது.அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளாம்.

முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.