அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான்.எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள்! (திருக்குர்ஆன் 2 :22 )
வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளை புறக்கணிக்கின்றனர்.(திருக்குர்ஆன் 21:32 )
அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்..(திருக்குர்ஆன் 40:64 )
உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!..(திருக்குர்ஆன் 52:5 )
வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?
விண்ணிலிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற ஏறி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.
மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைக்கிறது. இது மாதிரியான பாதுகாப்புகளைச் செய்வதால் வானத்தை முகடு என்று திருக்குர்ஆன் கூறுகிறது.இதுவும் மாபெரும் அறிவியல் உண்மையாகும் .
who are you first introduce yourself
ReplyDelete