Wednesday, October 20, 2010
ஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்
Tuesday, October 12, 2010
மனிதர்களால் குறையும் பூமி.
Tuesday, August 3, 2010
உதிக்கும் பல திசைகள்
சாதாரணமாக திசைகளைப்
பற்றி பேசும் போது கிழக்கு
மேற்கு என்று ஒருமையில் தான்
குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன்
இரண்டு
கிழக்குகள் இரண்டு மேற்குகள்
எனவும் பல கிழக்குகள் பல
மேற்குகள் எனவும்
பயன்படுத்தியுள்ளது.
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் 37:5
(அவன்) இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் (55:17)
கிழக்குகளுக்கும் மேற்க்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்ப்போர் அல்லர். திருக்குர்ஆன் (70:40)
இரண்டு கிழக்குகள்
இரண்டு மேற்குகள்' என்ற
சொற்றொடரும் 'பல கிழக்குகள் பல
மேற்குகள்' என்ற சொற்றொடரும் இந்தப் பூமி
உருண்டை என்பதற்குத் தெளிவான
சான்றாக அமைந்துள்ளது.
பூமி தட்டையாக
இருந்தால் சூரியன் ஒரு இடத்தில்
உதித்து மறு இடத்தில்
மறைந்து விடும்.
சூரியன் உதிக்கும் திசையைக்
கிழக்கு என்போம். மறையும்
திசையை மேற்கு
என்போம்.
பூமி உருண்டையாக
இருந்தால் நமக்கு எந்தத் திசையில்
சூரியன்
மறைகிறதோ அதே திசையில் சூரியன்
உதிப்பதை பூமியின் மறு பக்கத்தில்
உள்ளவர் காண்பார், அதாவது நமக்குக்
கிழக்காக இருப்பது மறு பக்கம்
உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது.
நமக்கு மேற்காக இருப்பது மறு பக்கம்
உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது.
இரண்டு கிழக்குகள்,
இரண்டு மேற்குகள்
என்பது எவ்வளவு பொருள்
பதிந்தது என்பதை நாம் சிந்திக்க
வேண்டும்.
பூமி உருண்டையாக இருந்தால்
பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும்
உதிக்கும் பல
திசைகள் உருவாகின்றன; மறையும்
திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
பல உதிக்கும் திசைகள், பல மறையும்
திசைகள் என்ற சொல் மூலம்
பூமி உருண்டை
வடிவிலானது என்ற அறிவியல்
உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும்
விஞ்ஞானி
பேசுவது போல் திருக்குர்ஆன்
பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன்
இறை வேதம்
என்பதற்குச் சான்றாகும்.