Sunday, October 25, 2009

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆண் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?


இப்பொழுதுள்ள குரானையும் அருங்காட்சியத்தில் உள்ள அந்த பழைய குரானையும் ஒப்பிட்டால் எந்த வேறுபாடும் காண முடியாது.
முதலில் இந்த கேள்வி உருவானதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.குர்ஆணை படித்து பார்க்கும் எவருக்கும் இதில் உள்ள அறிவியல் உண்மையாக இருக்கட்டும்,குற்றவியல் சட்டமாக இருக்கட்டும்,பெண்ணுரிமை சம்பத்தப்பட்ட விசயமாக இருக்கட்டும்,ஒழுக்ககேடுகளுக்கு தடை போடும் விசயங்களாகட்டும் படித்து பிரமிச்சிப்போய் முதலில் தோன்றும் சந்தேகம் இந்த குர்ஆண் நூறு சதவிகிதம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாம் கற்று தேர்ந்த ஒரு மனிதனால் எழுதப்பட்டதுபோல் இருக்கிறதே என்பதுதான்.

எனவேதான் இந்த குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த யாரோ சிலரால் எழுதப்பட்டு நபியவர்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது.

இந்த சந்தேகத்திற்கு வரலாற்று விளக்கங்கள்தான் தேவை முகம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் கற்காலம் அல்ல வரலாறுகளை எழுதி பாதுகாத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருந்த காலம்தான் அது.அவர்களது பிரச்சாரம்,சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் நபியவர்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளனர்.
அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கி.பி.571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக்கனக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆண் அருளப்பட்டதாக கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆணுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்றும் கூட ரஷ்யாவின் தாஸ்கண்டு நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றும் கூட இந்த வரலாறுகளுக்கு சாட்சியம் கூறிக்கொண்டு இருக்கின்றன.
எனவே திருக்குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பத்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. காரணம் 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வை தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். (2:23)
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கர்க்கலுமே அதன் ஏறி பொருட்கள். (ஏக இறைவனை) மருப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

Saturday, October 17, 2009

பகுத்தறிவு என்ற போர்வையில் பழமை வாதிகள்.


பகுத்தறிவுக்காரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு பெரிய ஆற்றை கடந்து ஓர் ஊருக்கு வருகிறான் அவனைப் பார்த்து எப்படியப்பா உன்னால் வரமுடிந்தது என்று கேட்கிறோம்.அவன் அதற்க்கு தான் அந்த ஆற்றை கடக்க முற்ப்பட்ட போது தூரத்தில் இருந்த ஒரு நீண்ட பெரிய மரம் ஒன்று தானாகவே தன் அருகில் வந்து பாலம் போல் அந்த ஆற்றின் குறுக்கே சாய்ந்து கொண்டது அதன் மேல் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று தான் கடந்து வந்த கதையை சொல்கிறான்.

இதை யாராவது அறிவுள்ள மனிதனால் நம்ப முடியுமா?நிச்சயமாக ஒரு பகுத்தறிவுள்ளவன் இந்த சம்பவத்தை கேலி செய்து சொன்னவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்வான்.

நான் கேட்கிறேன் ஒரு மரம் தானாக ஆற்றின் பாலமாக வந்ததை மறுக்கும் பகுத்தறிவு இந்த பேரண்டம் அத்தனை கோள்கள் பல அறிவியல் அதிசயத்தை உள்ளடக்கியிருக்கும் கடல் இவையெல்லாம் தானாக உர்வாகவில்லை என்பதை மட்டும் உங்கள் பகுத்தறிவு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பேசுவது பகுத்தறிவா?அடி முட்டாள் தனமா?இல்லை பகுத்தறிவு போர்வையில் நீங்கள் போடும் வெளி வேசமா?

கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஜயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள்.

எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.
பெரியாரையாவது ஒழுங்காக பின் பற்றினார்களா என்றால் இல்லை என்றுதான் நம் பகுத்தறிவு சொல்கிறது.
கல்லை வணங்காதே கல்லுக்கு பொட்டு வைக்காதே பூ போஅடாதே நீ செய்வதை அந்த கல் உணராது என்று சொன்ன பெரியாரின் உருவத்தையே கல்லால் செதுக்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்தும் வேடிக்கையை நாம் பார்க்கிறோம்.

இப்போ நாம் கேட்கிறோம் பகுத்தரிவாதிகளே நீங்கள் போட்ட மாலையையும் மரியாதையும் அந்த கல்(பெரியார்)ஏற்றுக்கொண்டதா?அதை உணர்ந்து கொண்டதா?

மேலும் ஒருவன் இறந்த நாளை நினைவுப்படுத்தி கொண்டாடுவது தீபாவளி. அதனால் அதை கொண்டாட கூடாது என்று நாத்தீகம் பேசுகிறீர்கள்.
இது போன்று நாட்களை முர்ப்படுத்தி நினைவு நாள் பிறந்த நாள் என்று கொண்டாடுவது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்றும் சொல்லும் நீங்கள் பெரியார் அவர்களின் அவர்களின் நினைவு நாளை முன்னீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் இரத்த தானம் செய்வதும் ஏன்?மற்ற நாட்களில் செய்ய வேண்டியதுதானே?
இப்படி பகுத்தறிவாளர்களை நோக்கி லட்சக்கணக்கான கேள்விகள் உண்டு.
இங்கே ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இஸ்லாத்த்திர்க்கு அளவுகோல் குரானும்,நபிகள் நாயாகம் அவர்களின் தூய்மையையான வழிகாட்டுதளும்தான்.நீங்கள் இவ்வுலகில் பார்க்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் அரபு நாட்டில் வாழும் சில பெயரளவு முஸ்லீம்களும் அல்ல.குறிப்பாக தர்கா வணங்கிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் இஸ்லாத்தை தவறான வழியில் தெரிந்து கொண்டு அதாவது நுனிப்புல் மேய்ந்து விட்டு விமர்சனம் என்ற பெயரில் விசமத்தனம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

குரான் எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது..

குரான் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கிறது.

குரான் ஒருகாலும் அறிவியலுக்கு முரண்படாது.

குரான் கூறும் சட்டமே உலக அமைதிக்கு தீர்வு.

குரான் பெண்ணுரிமையை பேசுகிறது.

இப்படி குரான் விடும் சவால்களை எதிர்த்து விமர்சனமோ விவாதமோ செய்யும் யாராக இருந்தாலும் சரி தயவு செய்து எழிய தமிழில் உள்ள குரான் மொழிபெயர்ப்புகளை படித்துவிட்டு வாருங்கள்.

குறிப்பு:உங்களுக்கு குரான் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் இலவசமாக அனுப்பி வைப்போம்.(இஸ்லாம் அல்லாத சகோதரர்களுக்கு மட்டும்)


Sunday, October 11, 2009

பெண்களுக்கு பர்தா பாதுகாப்புக் கவசமா?


ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்ற இந்த சகோதரிக்கு இந்த ஆடை என்ன தடையாகவா இருந்தது?


(நபியே!) முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதை தவிர (வேறு எதையும் வெளிக்காட்டலாகாது)தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் முஃமினான பெண்கள் தன் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் பெண்களைவிரும்பமுடியாத அளவு வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்கள் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களை தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்தக்கூடாது. தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்க தங்கள் கால்களை தட்;டித் தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமீன்களே இதில் உங்களிடம் ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின் நீங்கள் தவ்பா செய்து பிழைபொருக்கத் தேடி, நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்குர்ஆன் - 24 : 31

நபியே நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளும்படி கூறுவீராக. அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன் அல்குர்ஆன் 33: 59

நபியின் மனைவிகளே நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். அறியாமைக் காலத்து பெண்களைப் போல அலைந்து திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைபிடித்து தொழுங்கள். ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுடைய தூதருக்கும் கீழப்படியுங்கள். நபியின் வீட்டை உடையவர்களே உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி உங்களை பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் : 33 :33

இறைவன் இந்த உலகில் ஆணையும், பெண்ணையும் ஜோடியாக படைத்துள்ளான். அவர்கள் தங்களை தவறான பாதையை விட்டும் தடுத்துக்கொள்ள முஃமினான ஆண்களிலும், பெண்களிலும் தகுதியுள்ளவர்களுக்கு திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. அதில் அவனே அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக கூறுகிறான். இதிலிருந்து உடல் கவர்ச்சியின் ஆபத்தை இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

இன்று உலகில் உடல் கவர்ச்சி ஏற்படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே. இதுவே மனிதர்களின் மனதில் சந்தேகங்களையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது. ஷைத்தான் மனிதனுக்கு பரம எதிரியாய் இருக்கிறான். அவன் மனிதர்கள் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றான்.

பெண்களுக்கு ஆடை குறைப்பு கலாச்சாரத்தை இன்று நாகரிகம் என்ற பெயரிலும், கலாச்சாரம் என்ற பெயரிலும், உண்டாக்கியதின் விளைவு. பெண்களை போகப்பொருளாக பார்க்கப்படுகிறார்கள், இதற்கு இந்த கேடு கெட்ட ஆடை குறைப்பு கலாச்சாரமே காரணம்.

மனித சமூகத்தில் உலவ எல்லா சமூகமும் ஆண் பெண் இருபாலர் அணிகின்ற ஆடையின் அளவை வகுத்துள்ளனர். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வகுத்துள்ள ஆடையானது தன் உடல் கவர்ச்சி(அங்கஅவையங்கள்) வெளியில் தெரியாதவண்ணம் முகம், கைகளைத்தவிர மற்ற பாகங்களை மறைக்கும் முகமாக அமைகின்ற ஆடையே பர்தாவாகும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: இருவர் நரகவாசிகளாவர். அவர்களை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை. முதலாமவர்கள்;, மாட்டின் வாலைபோன்ற சவுக்கை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி அதிகாரம் செய்பவர்கள். இரண்டாம் வகுப்பினர், அரை குறை ஆடையணிந்து நிர்வாணமாக காட்சியளித்து, நடக்கும்போது ஒய்யார நடை நடந்து, அடுத்தவர்களை கிரங்கடித்து, தலையை தாழ்த்தி நடக்காது தன் அழகை காட்டவேண்டும் என்பதற்காக தலையை தூக்கிக்கொண்டு நடக்கும் பெண்கள். இவர்கள் இருவரும் சுவனத்தில் நுழையவே முடியாது. அன்றியும் அதன் வாடயைக்கூட நுகரமுடியாது. அவர்களை விட்டும் சுவனத்தின் வாடை பல மைல்களுக்கப்பால் இருக்கும். அறிவிப்பாளர்: அப+ஹ{ரைரா, ஆதாரம்: முஸ்லிம்.

பெண்களின் உரிமைமையைப் பேணுவதில் இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவம்;போல் வேறு எந்தமதத்திலும் காண இயலாது. இன்று பெண்ணுரிமை பேசுபவர்கள், இவ்வுலகில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, முறைகேடான குழந்தை பிறப்பு, விபச்சாரம் போன்ற, பெண்களுக்கு கொடுமைகள் ஏற்படும் போதும் அவர்களின் உரிமைகள் மீரப்படும்போதும் பெரும்பாலும் அவர்களை கைவிட்டுவிடுவதைத்தான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் இஸ்லாம் ஒன்றே பெண்ணுரிமையையும், பெண் பாதுகாப்பையும் ஒருங்கே அளிக்கிறது. அதற்கான ஒரு சான்றுதான் பர்தா.

பர்தா அணிந்த பெண்கள் தங்கள் உலக கடமைகளை, பாதுகாப்போடு செயல்படுத்த முடியும். புதிய கலாச்சாரம் என்று பேசும் மேலை நாடுகள்கூட பர்தாவை உணரத் துவங்கியுள்ளதையும் அங்குள்ள பெண்களிடமிருந்து பர்தாவுக்கான ஆதரவுக்குரல் ஓங்கிஒலிப்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்