ஒரு தடவை தொழுதால் போதாதா?ஏன் ஐந்து நேரம் தொழ வேண்டும்?
கடவுளுக்கு தூக்கம் மறதி இல்லை எப்போதும் விழிப்போடுதான் இருப்பார் என சொல்கிறீர்கள் அப்படிப்பட்டவரை ஒரு தடவை தொழுதால் நம்மை பார்க்க மாட்டாரா? இல்லை ஐந்து வேலை தொழுதால் தான் நம்மை பார்ப்பாரா?
நாம் தொழாமல் இருந்தாலும் கூட கடவுள் நம்மை கண்டிப்பாக பார்ப்பார். கடவுளுக்கு மறதி கிடையாது.
ஆனால் நாம் தொழுக வேண்டும்.ஏன்? காலையில் தொழுத நாம் இறைவனை மறந்துவிட்டு மக்களை ஏமாற்ற, லஞ்சம் வாங்க, கொடுமைகள் செய்ய ஆரம்பிக்கிறோம். இறை விசுவாசத்தை நினைவுபடுத்தி புதுப்பித்து புத்துணர்வு பெறுகிறோம். இது கடவுளுக்கு மறதி என்ற காரணத்தினால் அல்ல. எனக்கும், உங்களுக்கும் இருக்கும் மறதியின் காரணத்தினால் இறைவனை மறந்து தவறு செய்ய ஆரம்பிக்கிறோம். இதற்காக அப்படி தொழுக வேண்டி இருக்கிறது.
உதாரணமாக கோயிலுக்கு சென்று வழிபடும் போது இருக்கின்ற அந்த உணர்வு வெளியே வந்த சற்று நேரத்தில் சிறிது சிறிதாக மங்கி விடுவதை அனுபவ ரீதியாக நாம் பார்க்கலாம். எனவே நமது வாழ்வைச் சீர்படுத்துவதற்காகத் தான் அடிக்கடி ஐவேளை பள்ளி வாயிலுக்குச் சென்று அந்த இறை உணர்வை புதுப்பிக்க வேண்டி இருக்கிறது.
இங்கு மிக மிக வருத்தத்தோடு ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதாவது முஸ்லிம்களில் ஐந்து நேரமும் பள்ளிக்குச் சென்று தொளுபவர்களிடம் இருக்கும் நேர்மை, ஒழுக்கம், நியாயம், பணிவு போன்றவை தொலாதவர்களிடம் காணப்படுவதில்லை. இதை நீங்கள் முஸ்லிம்களிடம் தாராளமாகக் காணலாம். ஐந்து நேரமும் தொளுபவர்களிடம் காணப்படும் பண்பு வாரத்துக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டும் தொளுபவர்களிடம் இருக்காது. எனவே தொழுகை என்பது நமது நகனுக்காகவே. ஆகவே ஐவேளையும் தொழுதாக வேண்டும்.
No comments:
Post a Comment