Sunday, May 3, 2009

இஸ்லாத்தில் ஆடு மாடுகளை அறுத்து பலி இடுவது மிருகவதை அல்லவா?


இஸ்லாம் மிருகவதை பற்றி என்ன சொல்கிறது? ஏன் என்றாள் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுவது இரக்க குணத்தை இழக்க செய்து விடும்தானே?

எல்லா உயிரினங்களும் மனிதனின் நன்மைக்காகப் படைக்கப்பட்டன என்பது இஸ்லாத்தின் கொள்கை. மனிதனுக்குக் கேடுதரும் உயிர்களை அழிக்கலாம். அதை உண்பதால் மனிதனுக்கு நன்மை என்றால் அப்போதும் அழிக்கலாம் என்று இஸ்லாம் தெளிவாக அறிவிக்கிறது.

ஆனால் இஸ்லாம் தவிர உலகில் மற்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் அறிவிக்காமல் அதே வதையைச் செய்து வருகின்றனர்.
மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை அழிக்கலாம் என்று பகிரங்கமாக அறிவிப்பதில் மட்டும் தான் இஸ்லாத்திற்கும், மற்ற சித்தாந்தத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. உயிரினங்களை வதைப்பதில் அல்ல.

* கொசு, மூட்டைப்பூச்சி ஆகியவை கடிக்கின்றன என்பதற்காக அதற்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. கடித்ததற்கு மரண தண்டனை என்பது வதையில்லையா?
* நமது உணவுகளை உண்டு விடுகிறது என்பதற்காக எலிகளைக் கொல்வது வதையில்லையா?
* நமக்கு வயிற்று உபாதை தருகிறது என்பதற்காக தண்ணீரில் உள்ள உயிர்களை தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொல்வது வதையல்லவா?
* கன்றுக் குட்டிக்காக சுரக்கும் பாலை வாயில்லா ஜீவனை ஏமாற்றி அருந்துவது வதையல்லவா?
* வண்டிகளிலும், ஏர்களிலும் பூட்டி மாடுகளை வதைப்பது ஜீவ காருண்யமாகுமா?
* மருத்துவப் பரிசோதனைக்காக எத்தனையோ உயிர்கள் அறுத்துக் கொல்லப்படுகிறது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்காக மற்ற உயிர்களை அறுத்துச் சோதிப்பதும் வதையல்லவா?
* நாய் கடித்து விட்டால் அதற்கு போடப்படும் ஊசி மருந்து எத்தனை உயிர்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது?
* தாவரங்களுக்குக் கூட உயிர் இருக்கிறது. அதனால் தான் அவை வளர்கின்றன; காய்க்கின்றன; பூக்கின்றன; இனவிருத்தி செய்கின்றன. அவற்றை அழித்து உண்பது வதையல்லவா?

இவ்வாறு செய்பவர்கள் வதை கூடாது என்று கூறிக் கொண்டு வதைக்கின்றனர். தமக்குத் தாமே முரண்படுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் எவ்வித முரண்பாடும் இல்லாமல் தெளிவாக அறிவித்துவிட்டு ""உனக்குப் பயன் இருந்தால் மட்டும் மற்ற உயிர்களைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறுகிறது. வித்தியாசம் அவ்வளவு தான்.

2 comments:

  1. keep posting really its very good effort

    ReplyDelete
  2. உங்கள் கருத்து தெலிவாக உல்லது.உங்கலின் இந்த இரைபனி தொடர இறைவன் அருல் புரிவானாக ஆமின்.

    ReplyDelete