Thursday, April 23, 2009

இஸ்லாமியர்கள் தர்காவில் கும்பிடு போடுவது ஏன்?




குர்ஆனில் கூறப்படிருப்பது போல் இறைவன் ஒன்று தான். முஹம்மது நபியும் இறைத்தூதர் தான். அவர் கடவுள் இல்லை அப்படி இருக்க தங்கள் மதத்தில் அவ்லியாக்கள், தர்காக்கள், வைத்து இறந்தவர்களுக்கு கும்பிடு போடுகிறார்களே இது ஏன்?


மகாலிங்கம்:மதுரை


பதில்:


சகோதரர் மகாலிங்கம் அவர்கள் நல்ல கேள்வியை கேட்டிருக்கிறார். இஸ்லாமிய சமூகம் வெட்கி தலை குனிய வேண்டிய கேள்வியை கேட்டிருக்கிறார்... தர்கா என்றாள் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தியாக வேண்டும். அப்போது தான் இக்கேள்விக்கான விடை புரியும்.


அதிகமான மக்களுக்கு இது விளங்குவதில்லை. தர்கா என்பது இறைவன் இருக்கும் இடம் என அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் வாழுகின்ற காலத்தில் நல்ல மனிதர் என பெயர் எடுத்த ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்துவிட்டு அப்புதை குழியின் மேல் கட்டடம் கட்டி அவருக்கு வழிபாடு நடத்தப்படும் இடம் தர்காவாகும்.


இறைவன் ஒருவன் தான் என குர் ஆனில் கூறப்பட்டிருக்க தர்காவுக்கு போகலாமா? என சகோதரர் மகாலிங்கம் அவர்கள் கேட்டார்கள். நிச்சயமாக முடியாது. இது மிகப்பெரும் தவறு. சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த அரபு நாடுகளிலோ தர்காக்கலள் கிடையாது. அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாடுகளிலெல்லாம் முஸ்லிம்கள் வாழகிறார்கள். அங்கெல்லாம் தர்காக்கள் கிடையாது.


"எனது சமாதியில் கட்டடம் கட்ட வேண்டாம். வழிபாடு நடத்த வேண்டாம். விழாக்கொண்டாட வேண்டானம்" என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அவர்களின் சமாதியையே வழிபடக் கூடாதென்றாள் மற்றவர்களின் சமாதிக்ள் எம்மாத்திரம்?


அறியாமையின் காரணமாக இஸ்லாம் என்றால் என்ன? என்று புரியாததன் காரணமாக இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடத்தப்படுகிறது.


ஆளுக்கொரு கடவுள் வைத்துக் கொள்ள விரும்புவது மணிதனிடம் காணப்படும் பலவீணமாகும். ராஷ்டீரிய


ஜனதாதளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஒரு முறை பாராளுமறத்தில் உரை நிகழ்த்துகையில் இந்தியாவின் ஜனத்தொகையின் அளவுக்கு இண்தியாவில் கடவுள் உண்டு எனக்கூறினார். அதாவது எத்தனை கோடி மக்கள் நாட்டில் வாழ்கிறார்களோ அத்தனை கோடி கடவுள் உண்டு என்பது தான் அதன் பொறுள். ஒன்றை பார்த்து அது கடவுள் என நான்கு பேர் சொன்னால் ஐம்பது பேர் அதை ஆமோதிப்பார்கள் இப்படி தான் கடவுள் கோட்பாடு இருக்கிறது.


முஸ்லிம்களில் பலர் கு ஆனையும் படிக்காமல், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது போதனைகளையும் தெறிந்து கொள்ளாமல் தர்காக்களுக்கு கும்மிடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்செயலுக்கும் இஸ்லாத்திற்க்கும் தொடர்பே கிடையாது. இஸ்லாமியப் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டால் முஸ்லிமாகி விட முடியாது. இந்தக் கேள்வியிலிருந்து முஸ்லிம்கள் பெற வேண்டிய பாடம் ஏராளம் உண்டு.




No comments:

Post a Comment