Saturday, April 25, 2009

இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாடு செய்வதை எதிர்ப்பது ஏன்?


பொதுவாக எல்லா மதத்தினரும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கிறார்கள்.ஆனால் முஸ்லிம் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்வதை ஆண்களே எதிர்கிறார்கள்.குர்ஆனில் இதற்குத் தடை உண்டா?சேது,அதிராம்பட்டியனம்:
பதில்:
குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இன்று தவறானப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு பற்றி என்னைக் கேட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல யாரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம் என்று தான் கூறுவேன்.

குடும்ப கட்டுப்பாட்டை செய்யாததால் மக்கள் தொகை பெருகுகிறது மக்கள் தொகைப் பெருகத்தால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது.குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டால் எல்லா குறைகளும் தீர்ந்து விடும் எனப் பிரச்சாரம் செய்ர்கிறார்கள். இது ஒரு மோசடிப் பிரச்சாரமாகும். இன்றைக்கு ஏறக்குறைய உலகத்தில் 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500 கோடி மக்களுக்கத் தேவையான உணவு உற்பபத்தியாகிக் கொண்டிருக்கிறது. தவறு எங்கு நிகழ்கிறது எனில் எல்லா உற்பத்தியும்பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது. 100 கோடி மக்கள் வாழக்கூடிய பணக்கார நாடுகளில் 1000 கோடி மக்களுக்குத் தேவையானபொருட்கள் குவிந்து விடுகிறது.

பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக மீதி உள்ள கோதுமை,அரிசி,பால் போன்றவற்றை உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடலில் போய் கொட்டி விடுகிறார்கள்.எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும். இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 100 கோடியாகும். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை 30 கோடி இருக்கும் போதும் இப்போதுள்ள உணவு பற்றாக்குறை இருக்கத் தான் செய்தது.

இந்திய மக்கள் தொகை 100 கோடி இருக்கும் போது எப்படி 30 கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதே போல் 30 கோடி மக்கள் இருந்த போது 10 கோடி மக்களுக்கும்,10 கோடி இருந்த போது 3 கோடி மக்களுக்கும் உணவு பற்றாக்குறை இருந்து வந்தது உண்மை. இதற்குக் காரணம் உணவு பற்றாக்குறையா? அல்லது மக்கள் தொகை பெருக்க? அல்லது விநியோக முறை சரியில்லாதது காரணமா? என ஆராய்ந்தால் விநியோக முறை சரியில்லை எனக் கூறலாம்.உற்பத்தியாகும் பொருட்களில் பெரும்பாலானவை ஒரே பக்கத்தில் போய் குவிந்து விடுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து பல நன்மைகள் அடைந்து இருக்கிறோம்.

அன்றைக்கு நெல்லைப் பயிர் செய்து 6 மாதம் கழித்து அறுவடை செய்தோம். பிறகு மூன்று மாதமாகச் சுருக்கி இன்று ஒன்றறை மாதத்தில் அறுவடை செய்ய அரம்பித்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம் மக்கள் தொகை பெருக்கமும்,நெருக்கடியும் தான். இக்காரணிகள் மனிதனைப் புதிய விஞ்ஞானக் கண்டுப்பிடுப்புகளின் பக்கம் இழுத்துச் செல்கிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் பஸ்ஸைக் கண்டுப்பிடித்தோம். விமானத்தை கண்டுப்பிடித்தோம்.மக்களுக்கான வசதி ஏற்படுத்தும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து கொண்டு செல்வதெல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவேயாகும்.

இன்னொன்றையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர்கள் இதே போல் யோசித்து இருந்தால் இன்று இவர்கள் ஆதரித்துப் பேச முடியுமா? உணவுப் பற்றாக்குறைகளுக்கு மக்கள் தொகைப் பெருக்கம் உண்மையான காரணமல்ல. வினியோகிக்கும் முறை சரியில்லை. பெரிய பெரிய பண முதலைகளிடம் செல்வங்கள் குவிந்து விடுகின்றன. இது தான் அடிப்படை காரணம். குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கின்றதா? என்றால் இந்த உரிமையை உரியவர்களிடமே விட்டு விடுகிறது. ஒரு பெண்ணிற்க்கு குழந்தை பெரறுவதால் ஏதேனும் கெடுதல் வரும் என்றால் குழந்தை பிறப்பை நிறுத்திக்கொள்ளும் உரிமை உண்டு.

No comments:

Post a Comment