Showing posts with label கூத்தாநல்லூர் ஜின்னா. Show all posts
Showing posts with label கூத்தாநல்லூர் ஜின்னா. Show all posts

Saturday, November 7, 2009

திருக்குர்ஆண் ஓர் வாழும் அற்புதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாராண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது அறிவைக்கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டுகொள்ளும்.

நூறு வருடங்களுக்கு பின் என்ன நடக்கும், என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்க்கு காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாக சேர்ந்து உருவாகிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்து பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதை காண முடியும்.அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும்,படிக்கவும் தெரியாத,மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆணை பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியில் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உர்ப்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களை குர்ஆண் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. 21 ஆம் நூற்றாண்டின் ஓர் தேர்ந்த மருத்துவ மேதையை விட அழஅகாக பேசுகிறது.

தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்கஆனின் பேச்சு இல்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்ப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்கஆண் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் "இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்" என்ற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும்.

இன்றைய அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆண் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வர்.முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆண் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கொரும் அளவுக்கு குர்ஆண் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாகிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு எல்லாராலும் ஏற்கத்தக்க அற்ப்புதமான தீர்வுகளை குர்ஆண் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்த கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குளம்,கோத்திரம்,சாதி,இவற்றால் ஏற்ப்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் திருக்குர்ஆண் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒலித்துக் கட்டியதை இதற்க்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை திருக்கஆண் கூறுகிறது.அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளாம்.

முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

Sunday, October 25, 2009

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆண் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?






இப்பொழுதுள்ள குரானையும் அருங்காட்சியத்தில் உள்ள அந்த பழைய குரானையும் ஒப்பிட்டால் எந்த வேறுபாடும் காண முடியாது.
முதலில் இந்த கேள்வி உருவானதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.குர்ஆணை படித்து பார்க்கும் எவருக்கும் இதில் உள்ள அறிவியல் உண்மையாக இருக்கட்டும்,குற்றவியல் சட்டமாக இருக்கட்டும்,பெண்ணுரிமை சம்பத்தப்பட்ட விசயமாக இருக்கட்டும்,ஒழுக்ககேடுகளுக்கு தடை போடும் விசயங்களாகட்டும் படித்து பிரமிச்சிப்போய் முதலில் தோன்றும் சந்தேகம் இந்த குர்ஆண் நூறு சதவிகிதம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாம் கற்று தேர்ந்த ஒரு மனிதனால் எழுதப்பட்டதுபோல் இருக்கிறதே என்பதுதான்.

எனவேதான் இந்த குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த யாரோ சிலரால் எழுதப்பட்டு நபியவர்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது.

இந்த சந்தேகத்திற்கு வரலாற்று விளக்கங்கள்தான் தேவை முகம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் கற்காலம் அல்ல வரலாறுகளை எழுதி பாதுகாத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருந்த காலம்தான் அது.அவர்களது பிரச்சாரம்,சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் நபியவர்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளனர்.
அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கி.பி.571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக்கனக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆண் அருளப்பட்டதாக கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆணுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்றும் கூட ரஷ்யாவின் தாஸ்கண்டு நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றும் கூட இந்த வரலாறுகளுக்கு சாட்சியம் கூறிக்கொண்டு இருக்கின்றன.
எனவே திருக்குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பத்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. காரணம் 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வை தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். (2:23)
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கர்க்கலுமே அதன் ஏறி பொருட்கள். (ஏக இறைவனை) மருப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

Saturday, October 17, 2009

பகுத்தறிவு என்ற போர்வையில் பழமை வாதிகள்.


பகுத்தறிவுக்காரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு பெரிய ஆற்றை கடந்து ஓர் ஊருக்கு வருகிறான் அவனைப் பார்த்து எப்படியப்பா உன்னால் வரமுடிந்தது என்று கேட்கிறோம்.அவன் அதற்க்கு தான் அந்த ஆற்றை கடக்க முற்ப்பட்ட போது தூரத்தில் இருந்த ஒரு நீண்ட பெரிய மரம் ஒன்று தானாகவே தன் அருகில் வந்து பாலம் போல் அந்த ஆற்றின் குறுக்கே சாய்ந்து கொண்டது அதன் மேல் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று தான் கடந்து வந்த கதையை சொல்கிறான்.

இதை யாராவது அறிவுள்ள மனிதனால் நம்ப முடியுமா?நிச்சயமாக ஒரு பகுத்தறிவுள்ளவன் இந்த சம்பவத்தை கேலி செய்து சொன்னவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்வான்.

நான் கேட்கிறேன் ஒரு மரம் தானாக ஆற்றின் பாலமாக வந்ததை மறுக்கும் பகுத்தறிவு இந்த பேரண்டம் அத்தனை கோள்கள் பல அறிவியல் அதிசயத்தை உள்ளடக்கியிருக்கும் கடல் இவையெல்லாம் தானாக உர்வாகவில்லை என்பதை மட்டும் உங்கள் பகுத்தறிவு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பேசுவது பகுத்தறிவா?அடி முட்டாள் தனமா?இல்லை பகுத்தறிவு போர்வையில் நீங்கள் போடும் வெளி வேசமா?

கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஜயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள்.

எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.
பெரியாரையாவது ஒழுங்காக பின் பற்றினார்களா என்றால் இல்லை என்றுதான் நம் பகுத்தறிவு சொல்கிறது.
கல்லை வணங்காதே கல்லுக்கு பொட்டு வைக்காதே பூ போஅடாதே நீ செய்வதை அந்த கல் உணராது என்று சொன்ன பெரியாரின் உருவத்தையே கல்லால் செதுக்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்தும் வேடிக்கையை நாம் பார்க்கிறோம்.

இப்போ நாம் கேட்கிறோம் பகுத்தரிவாதிகளே நீங்கள் போட்ட மாலையையும் மரியாதையும் அந்த கல்(பெரியார்)ஏற்றுக்கொண்டதா?அதை உணர்ந்து கொண்டதா?

மேலும் ஒருவன் இறந்த நாளை நினைவுப்படுத்தி கொண்டாடுவது தீபாவளி. அதனால் அதை கொண்டாட கூடாது என்று நாத்தீகம் பேசுகிறீர்கள்.
இது போன்று நாட்களை முர்ப்படுத்தி நினைவு நாள் பிறந்த நாள் என்று கொண்டாடுவது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்றும் சொல்லும் நீங்கள் பெரியார் அவர்களின் அவர்களின் நினைவு நாளை முன்னீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் இரத்த தானம் செய்வதும் ஏன்?மற்ற நாட்களில் செய்ய வேண்டியதுதானே?
இப்படி பகுத்தறிவாளர்களை நோக்கி லட்சக்கணக்கான கேள்விகள் உண்டு.
இங்கே ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இஸ்லாத்த்திர்க்கு அளவுகோல் குரானும்,நபிகள் நாயாகம் அவர்களின் தூய்மையையான வழிகாட்டுதளும்தான்.நீங்கள் இவ்வுலகில் பார்க்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் அரபு நாட்டில் வாழும் சில பெயரளவு முஸ்லீம்களும் அல்ல.குறிப்பாக தர்கா வணங்கிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் இஸ்லாத்தை தவறான வழியில் தெரிந்து கொண்டு அதாவது நுனிப்புல் மேய்ந்து விட்டு விமர்சனம் என்ற பெயரில் விசமத்தனம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

குரான் எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது..

குரான் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கிறது.

குரான் ஒருகாலும் அறிவியலுக்கு முரண்படாது.

குரான் கூறும் சட்டமே உலக அமைதிக்கு தீர்வு.

குரான் பெண்ணுரிமையை பேசுகிறது.

இப்படி குரான் விடும் சவால்களை எதிர்த்து விமர்சனமோ விவாதமோ செய்யும் யாராக இருந்தாலும் சரி தயவு செய்து எழிய தமிழில் உள்ள குரான் மொழிபெயர்ப்புகளை படித்துவிட்டு வாருங்கள்.

குறிப்பு:உங்களுக்கு குரான் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் இலவசமாக அனுப்பி வைப்போம்.(இஸ்லாம் அல்லாத சகோதரர்களுக்கு மட்டும்)


Sunday, October 11, 2009

பெண்களுக்கு பர்தா பாதுகாப்புக் கவசமா?


ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்ற இந்த சகோதரிக்கு இந்த ஆடை என்ன தடையாகவா இருந்தது?


(நபியே!) முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதை தவிர (வேறு எதையும் வெளிக்காட்டலாகாது)தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் முஃமினான பெண்கள் தன் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் பெண்களைவிரும்பமுடியாத அளவு வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்கள் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களை தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்தக்கூடாது. தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்க தங்கள் கால்களை தட்;டித் தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமீன்களே இதில் உங்களிடம் ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின் நீங்கள் தவ்பா செய்து பிழைபொருக்கத் தேடி, நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்குர்ஆன் - 24 : 31

நபியே நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளும்படி கூறுவீராக. அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன் அல்குர்ஆன் 33: 59

நபியின் மனைவிகளே நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். அறியாமைக் காலத்து பெண்களைப் போல அலைந்து திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைபிடித்து தொழுங்கள். ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுடைய தூதருக்கும் கீழப்படியுங்கள். நபியின் வீட்டை உடையவர்களே உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி உங்களை பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் : 33 :33

இறைவன் இந்த உலகில் ஆணையும், பெண்ணையும் ஜோடியாக படைத்துள்ளான். அவர்கள் தங்களை தவறான பாதையை விட்டும் தடுத்துக்கொள்ள முஃமினான ஆண்களிலும், பெண்களிலும் தகுதியுள்ளவர்களுக்கு திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. அதில் அவனே அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக கூறுகிறான். இதிலிருந்து உடல் கவர்ச்சியின் ஆபத்தை இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

இன்று உலகில் உடல் கவர்ச்சி ஏற்படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே. இதுவே மனிதர்களின் மனதில் சந்தேகங்களையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது. ஷைத்தான் மனிதனுக்கு பரம எதிரியாய் இருக்கிறான். அவன் மனிதர்கள் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றான்.

பெண்களுக்கு ஆடை குறைப்பு கலாச்சாரத்தை இன்று நாகரிகம் என்ற பெயரிலும், கலாச்சாரம் என்ற பெயரிலும், உண்டாக்கியதின் விளைவு. பெண்களை போகப்பொருளாக பார்க்கப்படுகிறார்கள், இதற்கு இந்த கேடு கெட்ட ஆடை குறைப்பு கலாச்சாரமே காரணம்.

மனித சமூகத்தில் உலவ எல்லா சமூகமும் ஆண் பெண் இருபாலர் அணிகின்ற ஆடையின் அளவை வகுத்துள்ளனர். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வகுத்துள்ள ஆடையானது தன் உடல் கவர்ச்சி(அங்கஅவையங்கள்) வெளியில் தெரியாதவண்ணம் முகம், கைகளைத்தவிர மற்ற பாகங்களை மறைக்கும் முகமாக அமைகின்ற ஆடையே பர்தாவாகும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: இருவர் நரகவாசிகளாவர். அவர்களை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை. முதலாமவர்கள்;, மாட்டின் வாலைபோன்ற சவுக்கை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி அதிகாரம் செய்பவர்கள். இரண்டாம் வகுப்பினர், அரை குறை ஆடையணிந்து நிர்வாணமாக காட்சியளித்து, நடக்கும்போது ஒய்யார நடை நடந்து, அடுத்தவர்களை கிரங்கடித்து, தலையை தாழ்த்தி நடக்காது தன் அழகை காட்டவேண்டும் என்பதற்காக தலையை தூக்கிக்கொண்டு நடக்கும் பெண்கள். இவர்கள் இருவரும் சுவனத்தில் நுழையவே முடியாது. அன்றியும் அதன் வாடயைக்கூட நுகரமுடியாது. அவர்களை விட்டும் சுவனத்தின் வாடை பல மைல்களுக்கப்பால் இருக்கும். அறிவிப்பாளர்: அப+ஹ{ரைரா, ஆதாரம்: முஸ்லிம்.

பெண்களின் உரிமைமையைப் பேணுவதில் இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவம்;போல் வேறு எந்தமதத்திலும் காண இயலாது. இன்று பெண்ணுரிமை பேசுபவர்கள், இவ்வுலகில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, முறைகேடான குழந்தை பிறப்பு, விபச்சாரம் போன்ற, பெண்களுக்கு கொடுமைகள் ஏற்படும் போதும் அவர்களின் உரிமைகள் மீரப்படும்போதும் பெரும்பாலும் அவர்களை கைவிட்டுவிடுவதைத்தான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் இஸ்லாம் ஒன்றே பெண்ணுரிமையையும், பெண் பாதுகாப்பையும் ஒருங்கே அளிக்கிறது. அதற்கான ஒரு சான்றுதான் பர்தா.

பர்தா அணிந்த பெண்கள் தங்கள் உலக கடமைகளை, பாதுகாப்போடு செயல்படுத்த முடியும். புதிய கலாச்சாரம் என்று பேசும் மேலை நாடுகள்கூட பர்தாவை உணரத் துவங்கியுள்ளதையும் அங்குள்ள பெண்களிடமிருந்து பர்தாவுக்கான ஆதரவுக்குரல் ஓங்கிஒலிப்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்

Monday, September 28, 2009

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

மனித உடலில் இரத்த ஓட்டம்.
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.


* மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர்.

நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

Tuesday, May 12, 2009

பள்ளிவாசலுக்காக மாற்று மதத்தவறிடம் நன்கொடை வாங்கலாமா? இஸ்லாத்தில் அதற்க்கு தடை இருக்கின்றதா?

பள்ளிவாசலுக்காக மாற்று மதத்தினரிடம் நன்கொடை வாங்கலாமா?

பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஃபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான். அவர்களின் பொருட் செலவில் தான் புதுப்பிக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதில் அதற்காக மண் சுமந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியை நிறுவி கஃபா ஆலயத்தையும் கைவசப்படுத்திய போது முஸ்லிமல்லாதவர்களின் பொருட்செலவில் கட்டப்பட்டதால் அதை இடித்துவிட்டு கட்டவில்லை. இடித்துவிட்டு கட்ட நினைத்தால் அது அவர்களுக்கு மிக எளிதாகவே சாத்தியமாகியிருக்கும்.

முஸ்லிமல்லாதவர்களால் கட்டப்பட்ட அந்தப் பள்ளியில் தான் தொழுதார்கள். அங்கு தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.

காஃபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டவும் அவர்கள் சிந்தித்ததுண்டு, அதற்கு இப்ராஹீம் நபி அவர்கள் கட்டிய வடிவில் கஃபாவை அவர்கள் கட்டவில்லை என்பதைத் தான் காரணமாகக் கூறினார்களே தவிர முஸ்லிமல்லாதவர்களின் பொருட்களால் கட்டப்பட்டதைக் காரணமாகக் கூறவில்லை.

# இப்ராஹீம் நபி கட்டிய கஃபாவுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்) சிறுவராக இருந்த போது கஃபாவைக் கட்டியவர்கள் ஒரு வாசலுடன் கட்டி முடித்திருந்தார்கள்.

# இப்ராஹீம் நபியின் கஃபா மூன்று பக்கம் நேராகவும், ஒருபக்கம் அரை வட்டமாகவும் இவ்வாறு இருந்தது.

உலகின் மிகச் சிறந்த ஆலயமே முஸ்லிமல்லாதவர்களின் பொருளுதவியால் கட்டப்பட்டிருந்து, அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியிருக்கும் போது மற்ற பள்ளிவாசல்களுக்கு பிற மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில் தவறில்லை.

அதே நேரத்தில் நன்கொடை கொடுத்ததால் இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களைப் பள்ளிவாசளில் செய்ய நிர்பந்தம் செய்வார்கள் என்றிருந்தால் அந்தக் காரணத்திற்காக தவிர்க்கலாம்.

இன்று அவர்கள் நன்கொடை கொடுத்ததிற்காக நாளை மாற்று மத சகோதரர்களின் ஆலயங்களுக்காக நன்கொடை கேட்டால் நாம் பல தெய்வ கொள்கையை ஆதரிக்க நேரிடும் என்பதால் தவிர்க்கலாம்.


ஒரு வேளை இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடாக இருந்து அங்கே முஸ்லிமல்லாத மக்கள் வாழ்வார்களேயானால் அவர்களுக்கு அவர்களின் வழிபாட்டு தளங்களை கட்டிக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும் இது தான் நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழி முறை.


நோன்புக் கஞ்சி ஒரு உணவு தான். அது ஒரு புனிதமான உணவு கிடையாது. மற்றவர்கள் தரும் உணவுப் பொருட்களை எவ்வாறு சாப்பிடலாமோ அவ்வாறு அவர்கள் நோன்புக் கஞ்சி காய்ச்சினால் அதையும் உண்ணலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்கள் இவ்வாறு உதவினால் மறுமையில் பயன் கிடைக்குமா என்பது தனி விஷயம்.

அகில உலகுக்கும் ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்பதை நம்பாமல், யார் எந்த நல்லதைச் செய்தாலும் அதற்கான பலன் இவ்வுலகில் கிடைக்குமே தவிர மறுமையில் சொர்க்கத்தைப் பெற முடியாது. ஒரே ஒரு கடவுள் தான் என்று நம்பாவிட்டால் அந்த ஒரு கடவுளிடம் ஏதும் கிடைக்காது.

Thursday, May 7, 2009

குளோனிங் முறையில் படைக்கப்பட்ட மனிதர்கள் இறைவனை வணங்க வேண்டுமா?


அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா?


இறைனவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.


மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒருயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! ஒறு எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது.


நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர, மனிதனே எதையும் படைக்க வில்லை.


உயிரணுவும், மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எவ்வாறு உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுளின் வேளையை செய்தான் எனக்கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் முடியவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.