கடலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது.என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.
ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர் ஆன் தெளிவாக கூறி இது இறைவனின் வார்த்தை தான் உறுதிப் படுத்துகிறது.
அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. திருக்குர் ஆன் 24:40
இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும் கூறுகிறான்.
கடலின் மேற்ப்பரப்பில் அதுவும் கடற்க்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.
கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்ச்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடல் ஆழத்தைபற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாக கூறியிருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.
எனவே திருக்குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.
No comments:
Post a Comment