Monday, December 28, 2009

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

இரு கடல்களுக்கிடையே தடுப்பு
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியுருப்பதாகக் கூறுகிறது.

(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும்இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (திருக்குர்ஆன் 27:61)

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.(திருக்குர்ஆன் 55:19,20)

கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.


இது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

Sunday, December 27, 2009

நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (திருக்குர்ஆண் 23 :18 )
பூமியின் மேற்ப்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.

இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580 தான் கண்டறிந்தனர்.

சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.

பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

Thursday, December 17, 2009

பூமியைத் தொட்டிலாக



பூமியைத் தொட்டிலாக
திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக்
குறிப்பிடுகிறது.
அவனே பூமியை உங்களுக்குத்ப் தொட்டிலாக அமைத்தான். (திருக்குர்ஆன் 20:53)

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். (திருக்குர்ஆன் 43:10)

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78:67)

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கா ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்கா ராட்டினம் போல் சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்கு தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் பொது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அது அவர்களுக்கு சுகமாகவும், நித்திரை தரக்கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத்தான் அல்ல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஓரங்களில் குறையும் பூமி



ஓரங்களில் குறையும் பூமி
நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )

அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.

நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )

அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.

Monday, December 14, 2009

முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொது அதை முளைகளாக நாடியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

மலைகளை முளைகளாக நாட்டினான். திருக்குர்ஆன் (79 :31 )


பூமியை தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78 :6,7 )


அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம், இனிமையான நீரையும் உங்களுக்கு புகட்டினோம் .. திருக்குர்ஆன் (77 :27 )


பூமியை விரித்தோம் , அதில் முளைகளை நாட்டினோம் , அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம் . திருக்குர்ஆன் (15 :19 )

பூமி உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும் , நீங்கள் வழியரிவதர்க்காக பல பாதைகளையும் , நதிகளையும் , பல அடையாளங்களையும் அவன் அமைத்தான் . நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர் . திருக்குர்ஆன் (16 :15,16)


பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதர்க்காக முளைகளை ஏற்ப்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்ப்படுத்தினோம். (திருக்குர்ஆன் 21:31)


(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி , அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா ? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா ? இல்லை ! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை . (திருக்குர்ஆன் 27:61)


நீங்கள் பார்க்கக்கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்ந்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 31 :10 )


அதன் மேலே முளைகளை ஏற்ப்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. (திருக்குர்ஆன் 41:10 )


ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதர்க்காக அறியப்படுவதே முளைகலாகும்.


இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.


வேகமாக பூமி சுழலும்போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.


இந்த நிலை ஏற்ப்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.


இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கணம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முலைகள் நட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.


ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.


இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.


பூமி முதலில் உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்க்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.


முதல் இரண்டு நாட்களில் பூமியை படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்ப்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41 :10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.

Monday, December 7, 2009

புவி ஈர்ப்பு சக்தி


புவி ஈர்ப்பு சக்தி

வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்த தூண்களும் இல்லை. என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் பொது தூங்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்ணனையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.


நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். (திருக்குர்ஆன் 13 :2 )


நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். (திருக்குர்ஆன் 31:10 )


நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான் எனக் கூறப்படுகிறது. "வானங்களுக்கும்,பூமிக்கும் தூண்கள் உள்ளன. ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது." என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.


பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடிக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம்.


இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோள்களும் அந்தரத்தில் எவ்வித பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியை பார்க்கின்றோம்.


எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.


வானத்திற்கும்,பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது முஹம்மது நபியவர்கள் "பார்க்கின்ற தூண்களின்றி" என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் "பார்க்கின்ற தூண்களின்றி" என்ற சொல்லைப் பயன்படுத்தி நம்மால் பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை இறைவன் மறைமுகமாக குறிப்பிடுகின்றான்.


திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.


பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை இயங்குகிறது என்பதை வேறு வார்த்தைகள் மூலம் மற்றொரு வசனத்திலும் இறைவன் தெளிவுப்படுத்துகிறான்.


வானவ்களும்,பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 35:41)


வானங்களும் பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.


வானங்களும் பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ,குறைந்தாலோ அவை சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருப்பதை யாரும் அறியலாம்.


புவி ஈர்ப்பு விசை பற்றி மற்றொரு கோணத்திலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத்த் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(திருக்குர்ஆன் 16 :79 )


வானங்களிலும்,பூமியிலும் உள்ளையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறிய வில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தளையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.(திருக்குர்ஆன் 24:41 )


அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும், இருப்பதை அவர்கள் கனவில்லையா? அளவற்ற அருளாலனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.(திருக்குர்ஆன் 67:19 )


பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது "அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன." உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கிறான்" என்று இறைவன் கூறுகிறான்.


இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.


வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.


பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக்கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக்கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையை தள்ளாமல் இந்த பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.


இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்ப்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.

Thursday, December 3, 2009

பூமியில் தான் வாழ முடியும்.

பூமியில் தான் வாழ முடியும்.

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது.விண்வெளிப்பயணம் கூட சாத்தியம் எனக்கூறும் திருக்குர்ஆன் ஆனால் பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் எனவும் வேறு எந்தக் கிரகத்திலும் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

"உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன." என்றும் கூறினோம்.(திருக்குர்ஆன் : 2 :36)

"உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன."என்று (இறைவன்) கூறினான். .(திருக்குர்ஆன் : 7:24)

"அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்" என்றும் கூறினான்..(திருக்குர்ஆன் : 7:25)

பூமியில் உங்களை வாழசெய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்ப்படுத்தினோம்...(திருக்குர்ஆன் : 7:10)

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். ..(திருக்குர்ஆன் : 30 :25)

"பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள்" என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒற்றோடராகும். எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பபடுவார்கள்" என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கும் வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.

"இதில் தான் வாழ்வீர்கள்" என்ற சொற்றொடர் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது." என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக்கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்துவிடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக்கூடாது. அது இயற்க்கைக்கு மாற்றமானது.

அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாக சுழல்வதால் தான் கோடை,குளிர்,வசந்தம்,மற்றும் இலையுதிர்க்காலம் ஏற்ப்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ,குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.எழுத படிக்கத்தெரியாத முஹம்மது நபிக்கு "இதில் தான் வாழ்வீர்கள்" என்று எவ்வாறு அடித்துக்கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

Tuesday, December 1, 2009

வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான்.எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள்! (திருக்குர்ஆன் 2 :22 )


வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளை புறக்கணிக்கின்றனர்.(திருக்குர்ஆன் 21:32 )


அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்..(திருக்குர்ஆன் 40:64 )


உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!..(திருக்குர்ஆன் 52:5 )


வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?


விண்ணிலிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற ஏறி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.


மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைக்கிறது. இது மாதிரியான பாதுகாப்புகளைச் செய்வதால் வானத்தை முகடு என்று திருக்குர்ஆன் கூறுகிறது.இதுவும் மாபெரும் அறிவியல் உண்மையாகும் .