Monday, December 28, 2009

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

இரு கடல்களுக்கிடையே தடுப்பு
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியுருப்பதாகக் கூறுகிறது.

(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும்இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (திருக்குர்ஆன் 27:61)

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.(திருக்குர்ஆன் 55:19,20)

கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.


இது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

4 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை அதிகம் உள்ளன.அருமை.

    ReplyDelete
  3. எழுதுங்கள் தொடர்ந்து...!
    word verification எடுத்து விடுங்கள்

    ReplyDelete
  4. இயற்கையை அல்குர் ஆன் வசனங்களின் ஆதரத்துடன் விவரித்து இருப்பது அருமை.தொடருங்கள்.ஜசகல்லாஹு ஹைரன்

    ReplyDelete